உலகைச்சுற்றி...

Date:2018-04-16

(1523850314)201804160228531961_First-Rohingya-refugees-repatriated-to-Myanmar-despite-UN_SECVPF.gif

* ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நுழைந்து, அந்த நாட்டு படையினருடன் மோதலில் ஈடுபட்டனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

* சீன தலைநகர் பீஜிங் நோக்கி பறந்த ஏர் சீனா விமானத்தில், ஒரு பயணி, விமான சேவையாளர் ஒருவரை பேனாவை ஆயுதமாக பயன்படுத்தி பிணைக்கைதியாக பிடிக்க முயற்சித்தார். இதனால் அந்த விமானம் அவசரமாக செங்ஜவ் நகரில் தரை இறக்கப்பட்டது. பயணிகளும், சிப்பந்திகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்த கூடுதல் விவரங்கள் தெரிய வரவில்லை.

* மாலியில் டிம்புக்டு நகரில் ஐ.நா. அமைதிப்படையினர் தளங்களுக்கு, அமைதிப்படையினர் போன்று சென்ற பயங்கரவாதிகள் கார்குண்டு தாக்குதல் நடத்தினர். ராக்கெட்டுகளையும் வீசினர். இதில் ஒருவர் பலி ஆனார். பலர் படுகாயம் அடைந்தனர்.

* அமெரிக்காவில் நியூயார்க்கின் புரூக்ளின் பூங்காவில் டேவிட் புக்கெல் (வயது 60) என்ற வக்கீல் தீக்குளித்து உயிர் விட்டார். பருவநிலை மாற்றத்துக்கு எதிராகத்தான் அவர் தீக்குளித்து உயிர் விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

* மியான்மரில் நடந்த இன கலவரங்களால் அங்கு இருந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்தனர். மீண்டும் அவர்களை மியான்மரில் குடியமர்த்த உடன்பாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வங்காளதேசத்தில் இருந்து 5 பேரை கொண்ட முதல் குடும்பம் மியான்மர் போய் சேர்ந்து உள்ளது.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg