இருப்பு வைக்கப்பட்டுள்ள அணுக்கழிவுகளால் அமெரிக்காவிற்கு ஆபத்து - விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Date:2017-05-27

(1495856322)201705270548310054_Storage-of-nuclear-waste-poses-threat-to-US-scientists-warn_SECVPF.gif

வாஷிங்டன்

அணு மின் நிலையங்களை நடத்துவோர் 5 பில்லியன் டாலர்கள் செலவழித்து அணுக்கழிவுகளை பாதுகாப்பானதாக வைத்திருக்கவில்லை என்றால் அமெரிக்கா கடும் ஆபத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டில் அணு கட்டுப்பாட்டு ஆணையம் தரைக்கு அடியில் இருக்கும் அணுக்கழிவுகளால் ஆபத்து ஏற்படக்கூடிய சாத்தியம் குறைவானது என்று கூறியிருந்தனர். இதற்காக பெரும் தொகையை செலவிடுவது தேவையில்லை என அவர்கள் கூறினர். இதையே விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர். ஆனால் தங்களுக்கு வசதியான முடிவையே ஆணையத்தினர் எடுத்துள்ளனர் என்றனர் விஞ்ஞானிகள். 

ஃபுகுஷிமாவில் ஏற்பட்ட அணு விபத்து நிலநடுக்கத்தால் நிகழ்ந்தது; அத்தகைய நிலநடுக்கும் அமெரிக்காவில் ஏற்படுவது பத்து மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறையே என்பதால் ஒவ்வொரு அணு ஈனுலைக்கும் 50 மில்லியன் டாலர்களை செலவழிப்பது தேவையற்றது என்பது ஆணையத்தின் வாதம்.

இம்மாதம் புளோடோனியத்தை கையாளும் இடத்தில் கைவிடப்பட்ட சுரங்கத்தில் ஏற்பட்ட சரிவு ஆபத்திற்கான ஒரு உதாரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது. நல்லவேளையாக அங்கு அணுக்கழிவுகள் ஏதுமில்லை. அணு உலையிலிருந்து வெளியேற்றப்பட்ட அணுக்கழிவுகள் 23 அடி ஆழமுள்ள தண்ணீரில் மூழ்கடிக்கப்படுகின்றன. அவை இரும்பு கிடங்குகளில் வைக்கப்படுகின்றன. ஆனால் அவற்றை பீப்பாய் போன்ற வறண்ட உருளைகளில் வைப்பதே பாதுகாப்பானது என்கின்றனர் அறிவியலர். ஏதேனும் ஒரு தாக்குதலிலோ, விபத்திலோ தண்ணீர் வடிந்து போனால் அணுக்கழிவுகள் எரிந்து போய் கதிரியக்கத்தை வெளியிடும். அப்படியொரு நிகழ்வு நிகழும் பட்சத்தில் சராசரியாக 8 மில்லியன் மக்கள் இடம் பெயர வேண்டியிருக்கும்; சுமார் 2 டிரில்லியன் டாலர்களுக்கு இழப்பு ஏற்படும் என்று அறிவியலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

அமெரிக்காவில் 90 இடங்களில் அணுக்கழிவுகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவை பாதுகாப்புடன் பராமரிக்கப்படுவதாகவும் தொடர்புடைய அதிகாரிகள் சொல்கின்றனர்.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg