ஜம்மு காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Date:2017-05-27

(1495856768)201705270836157424_Infiltration-bid-foiled-by-Security-forces-in-Rampur-sector_SECVPF.gif

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரின் ராம்பூர் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை  இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது. பாகிஸ்தானில் இருந்து, இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவது தொடர்கதையாக உள்ளது. அத்துடன், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி, இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதும், இந்திய எல்லைக்குள் வந்து, பாதுகாப்பு வீரர்களை கொன்றுவிட்டு செல்வதும் தொடர்கதையாகியுள்ளது. 

இந்த நிலையில், ராம்பூர் செக்டார் வழியாக இந்திய பகுதிக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவுவதை இந்திய ராணுவம் கவனித்தது. இதையடுத்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக ராணுவமும் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பயங்கரவாதிகள் அப்பகுதியில் உள்ளனரா? என்று பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg