சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியாகிறது

Date:2017-05-27

(1495857255)201705270141024277_CBSE-Class-12th-exam-resultReleasing-Tomorrow_SECVPF.gif

புதுடெல்லி,

சி.பி.எஸ்.இ. (மத்திய இடைநிலை கல்வி வாரியம்) 12–ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 9–ந்தேதி தொடங்கி, ஏப்ரல் 29–ந்தேதி முடிவடைந்தது. இந்தியா முழுவதும் 11 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழகத்தில் மட்டும் 15 ஆயிரத்து 450 மாணவ–மாணவிகள் எழுதினார்கள். 

தேர்வு முடிந்த நிலையில் எப்போது முடிவு வெளியாகும் என்று மாணவ–மாணவிகள் ஆர்வம் காட்டி வந்தனர். இந்தநிலையில் சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெளியாகும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்து உள்ளது. டெல்லி ஐகோர்ட்டு உத்தரவின்படி தேர்வு முடிவு வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வு முடிவை   www.results.nic.in, www.cbseresults.nic.in,  மற்றும்   www.cbse.nic.in    ஆகிய இணையதள முகவரிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg