ஊழல்வாதிகளிடம் பறித்த கருப்பு பணத்தை ஏழைகளுக்கு கொடுப்போம் பிரதமர் மோடி பேச்சு

Date:2017-05-27

(1495857416)201705270110480653_Black-money-to-the-corruptWe-will-give-the-poorPM-Modi_SECVPF.gif

கவுகாத்தி, 

மத்தியில் பா.ஜனதா அரசு பதவி ஏற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–

ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, நான் எடுத்த கடினமான முடிவு. அதை வைத்து மக்களிடையே ஆத்திரத்தை தூண்டிவிட எதிர்க்கட்சி தலைவர்கள் முயன்றனர். ஆனால், நான் எடுத்த முடிவை மக்கள் ஆதரித்தனர். இதற்காக 125 கோடி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் இப்போது மாற்றத்தை உணர்ந்து கொண்டுள்ளனர்.

கருப்பு பணத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது என்று முதலாவது மந்திரிசபை கூட்டத்திலேயே முடிவு செய்தோம். ஊழல்வாதிகளிடம் பறிக்கப்பட்ட கருப்பு பணம், ஏழைகளுக்கு வழங்கப்படும். இதற்காக நான் பிரச்சினைகளை சந்திக்கக்கூடும். ஆனால், மக்களுக்கு ஏற்கனவே வாக்குறுதி கொடுத்து இருப்பதால், இதை செய்வதற்கு நான் தயங்கமாட்டேன்.

இவ்வாறு மோடி பேசினார்.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg