மதுவிலக்கை வலியுறுத்தி டெல்லியில் போராடும் தமிழக இளைஞருக்கு ஜி.கே.வாசன் நேரில் ஆதரவு

Date:2017-05-27

(1495857714)201705270058546567_GK-Vasan-supports-the-Tamil-youth_SECVPF.gif

புதுடெல்லி, 

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி குமரி மாவட்டம் ஆற்றூரைச் சேர்ந்த டேவிட்ராஜ் (வயது 27), என்ற இளைஞர் டெல்லி ஜந்தர் மந்தரில் தனிநபராக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.  இவரது போராட்டம் நேற்று 26–வது நாளாக நடைபெற்றது. அவருக்கு டெல்லி வாழ் இளைஞர்கள் சிலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழகத்தை சேர்ந்த டேவிட்ராஜை நேற்று நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மது இல்லா தமிழகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று போராடும் இந்த இளைஞர் இதே போராட்டத்துக்காக சிறை சென்றுள்ளார். தமிழக அரசு, மது இல்லா தமிழகம் என்பதை உடனடியாக ஏற்படுத்தக்கூடிய உயர்ந்த உள்ளம் கொண்ட அரசாக இருக்க வேண்டும். குறுகிய காலத்தில் 100 சதவீத கடைகளையும் மூட வேண்டும் என்று த.மா.கா. கேட்டுக்கொள்கிறது.  இந்த இளைஞர் இங்கு போராட்டத்தை கைவிட்டு விட்டு, ஊர் திரும்பி அனைவரிடமும் கலந்து பேசி தமிழகத்தில் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வை தொடங்க வேண்டும். அதற்கு த.மா.கா. துணை நிற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg