தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாவை 10 சதவீதமாக குறைக்க முடிவு

Date:2017-05-27

(1495857825)201705270105568332_Labor-Fund-decided-to-reduce-the-subscription-of-10-percent_SECVPF.gif

புதுடெல்லி, 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (ஈ.பி.எப்.ஓ.) தொழிலாளர்களின் ஓய்வூதியம் தொடர்பான சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த அமைப்பின் கூட்டம் இன்று(சனிக்கிழமை) மராட்டிய மாநிலம் புனே நகரில் நடைபெறுகிறது. 

இந்த கூட்டத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் சந்தாவை 10 சதவீதமாக குறைத்திடும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றி மத்திய தொழிலாளர் நல அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த பரிந்துரையை நிறைவேற்றினால் தொழிலாளர்களின் செலவுக்கு கூடுதல் பணம் கிடைக்கும் என்றார்.

தற்போது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் மற்றும் தொழிலாளர்களின் டெபாசிட்டுடன் இணைந்த இன்சூரன்ஸ் திட்டம் ஆகியவற்றுக்காக தொழிலாளர்களும், தொழில் அதிபர்களும் இணைந்து அடிப்படை சம்பளத்தில் தலா 12 சதவீத சந்தா தொகையை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு தொழிலாளர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இது தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு திட்டங்களை நீர்த்து போகச் செய்துவிடும் என்று ஈ.பி.எப்.ஓ. அறங்காவல் குழுவின் உறுப்பினர்கள் பி.ஜே.பன்சூரி(பாரதீய மஸ்தூர் சங்கம்), டி.எல்.சச்தேவ்(ஏ.ஐ.டி.யூ.சி.) ஆகியோர் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg