72 வீரர்-வீராங்கனைகளுக்கு ரூ.4 கோடி ஊக்கத்தொகை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

Date:2017-05-27

(1495858250)201705270127323785_Palanisamy-gave-the-incentive_SECVPF.gif

சென்னை, 

சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தை சேர்ந்த 72 வீரர்-வீராங்கனைகள் மற்றும் 42 பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு 4 கோடியே 9 லட்சத்து 11 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

தேசிய விளையாட்டு போட்டி

2015-ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற 35-வது தேசிய விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த 66 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகையாக, 2 கோடியே 83 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் அவர்களது 29 பயிற்சியாளர்களுக்கு 27 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள்.

2016-ம் ஆண்டு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த உலக கோப்பை கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் டி.சேரலாதனுக்கு 50 லட்சம் ரூபாய்க்கான காசோலை. 2016-ம் ஆண்டு வியட்நாமில் நடைபெற்ற 5-வது பீச் ஆசியன் கபடி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற எஸ்.அந்தோணியம்மாளுக்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை.

கபடி வீராங்கனைகளுக்கு ரூ.6 லட்சம்

2016-ம் ஆண்டு சர்வதேச சதுரங்க மாஸ்டர் பட்டம் வென்ற சிவமகாதேவனுக்கு 3 லட்சம் ரூபாய்க்கான காசோலை. 2016-ம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற 4-வது ஆசிய இளையோர் பெண்கள் கபடி போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஐ.பவித்ரா மற்றும் என்.நதியா ஆகியோருக்கு தலா 3 லட்சம் வீதம், மொத்தம் 6 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள்.

2016-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த பாரா ஒலிம்பிக்ஸ் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற டி.மாரியப்பனின் பயிற்சியாளரான டி.சத்தியநாராயணாவுக்கு 30 லட்சம் ரூபாய்க்கான காசோலை. 2015-ம் ஆண்டு சர்வதேச மகளிர் சதுரங்க மாஸ்டர் பட்டம் வென்ற ஜி.கே. மோனிஷாவுக்கு 3 லட்சம் ரூபாய்க்கான காசோலை.

ரூ.4 கோடி ஊக்கத்தொகை

2010-ம் ஆண்டு வங்காளதேசம் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற 11-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களின் பயிற்சியாளர்கள் 12 பேர்களுக்கு 1 லட்சத்து 21 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலைகள் என மொத்தம் 72 விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மற்றும் அவர்களுடைய 42 பயிற்சியாளர்கள் ஆகியோருக்கு 4 கோடியே 9 லட்சத்து 11 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.

முதல்-அமைச்சரிடம் இருந்து பரிசுத் தொகைக்கான காசோலைகளை பெற்றுக் கொண்ட விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்கள் முதல்-அமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் ராஜேந்திரகுமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மைச் செயலாளர்-உறுப்பினர் செயலாளர் அஷோக் டோங்ரே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg