இராஜதந்திரத்தை வெற்றி கொள்ளும் திறன் தமிழ்த்தலைமைகளுக்கு உண்டா எனும் தலைப்பில் யாழில் கலந்துரையாடல்

Date:2017-05-27

(1495858744)625.147.560.350.160.300.053.800.264.160.90.jpg

தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் 'சிங்கள பெளத்தத் தலைமைகளின் இராஜதந்திரத்தை வெற்றி கொள்ளும் திறன் தமிழ்த் தலைமைகளுக்கு உண்டா?' எனும் தலைப்பிலான கருத்துரையும், கலந்துரையாடலும் யாழில் இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் யாழ். குப்பிளான் அறிவொளி சனசமூக நிலைய மண்டபத்தில் நாளை பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வில் தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையத்தின் இணைப்பாளர் என்.இன்பம் தலைமையில் நடைபெறவுள்ளது.

மேலும், இந்த நிகழ்வில் ஆர்வலர்கள் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை முன்வைக்குமாறு தமிழ்மக்களின் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையத்தின் இணைப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg