கனடாவின் இயற்கை அமைப்புகளில் மிகவும் தனித்துவமாக 10 ஹொட்டேல்கள்!

Date:2017-05-27

(1495892048)most1-600x400.jpg

தனது கண்கவர் நிலப்பகுதிக்காகவும் மற்றும் இயல்பான இயற்கைக்காவும் கனடா பெரிதும் மதிக்கப்படுகின்றது. நாட்டின் பல பாகங்களினதும் அழகான இயற்கை அழகையும் வளங்களையும் ரசிக்க விரும்பும் விருந்தினர்களிற்காக  அசாதாரணமான லாட்ஜ்களும் புதுமையான மற்றும் ஆடம்பரமாக இயற்கை அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய தனிப்பட்ட விடுதிகள் சில:
1-Hôtel de Glace, Valcartier, Qué.

கியுபெக்கில் 2001ல் அமைக்கப்பட்ட ஐஸ் ஹொட்டேல் ஆகும்.இது வரை ஒரு மில்லியனிற்கும் மேலான விருந்தினர்களை கவர்ந்துள்ளது. படிக பனி சிற்பங்களை கொண்டது.

2-இலவச ஸ்பிரிட் கோளங்கள் குவாலிகம் பீச், பிரிட்டிஷ் கொலம்பியா

மூன்று மரங்களிற்கிடையில் மிகப்பெரிய கோளம் இடை நீக்க கயிறுகளால் தொடுக்கப்பட்டுள்ளது. கோளம் மரம் மற்றும் கண்ணாடி இழையினால் ஆனது.

3-கிளெயோகுவொட் வைல்டர்னெஸ் ரிசாட். பிரிட்டிஷ் கொலம்பியா.

மிதவை விமானம் மூலம் அணுக கூடியது. யுனெஸ்கோவின் பாரம்பயரிய தளமாகும்.

4-வோகோ ஐலன்ட் இன் நியு பவுன்லாந்.
உலகின் நான்கு மூலைகளில் ஒன்றென கருதப்படுவது. நோத் போல் மற்றும் பூமத்திய ரேகைக்கும் பாதி இடையில் அமைந்துள்ளது.

5-டிரவுட் பொயின்ட் லாட்ஜ் யாமௌத், நோவ ஸ்கோசியா.

யுனெஸ்கோவின் உயிரிள வளாகத்தில்அமைந்துள்ளது. உலகின் 10-சிறந்த மீன் பிடி இடங்களில் ஒன்றாகவும் அமைகின்றது. பிடித்து-மற்றும்-விடுவிக்கும் திட்டத்தையும் கொண்டது.

6-ஆடம்பர புறநகர் முகாம் றென்வுறு. ஒன்ராறியோ.
துடுப்பு படகோட்ட வசதி கொண்டது. கயாக் கனோ ஷிப்லைன் வசதிகளும் உடையது.

7-வுளொரா போரா வன லாட்ஸஜ், எமா லேக். சஸ்கற்சுவான்.
குளிர் காலத்தில் திறக்கப்பட மாட்டாது. போரியல் வனத்தில் 30-ஏக்கர்களில் அமைந்துள்ளது. ஒவ்வொரு விதான-கூடாரத்திலும் நான்கு பேர்கள் வரை தூங்க கூடிய வசதி கொண்டது. எமா லேக் பல வகையான-படகோட்டல், சிறு படகுகள் ஓட்டுதல், காதலர்கள் மகிழக்கூடிய பறவை கவனிப்பு, நடை பயணம், நட்சத்திர ஒளிப்பதிவு போன்ற நடவடிக்கைகள் நிறைந்த இடம்.

8-லேசி பெய லாட்ஜ், சேச்சில். மனிரோபா.

“வடக்கு ஆச்சரியம்” எனப்படும் சுவாரஸ்யமான சுற்று சூழல்களை கொண்டது. தனிப்பட்ட பழங்குடி உணவுகளை பெருமைப்படுத்துகின்ற இடமாகும். கோடை மாதங்களில் 60,000 பெலூகா திமிங்கிலங்கள் ஹட்சன் குடாவை நிரப்பி இருப்பதை காணலாம். முன் பனி காலத்தில் இரண்டு நாட்கள் துருவ கரடிகளை காணக்கூடியதாக இருக்கும்.

9- ஏரி மீது விடுதி, வைற்ஹோஸ், யெலோ நைவ்.முன்பு கைவிடப்பட்ட மரத்துண்டு ஒன்று போல் காணப்பட்டு பின்னர் பழமையான புதுப்பாணியானதாக மாற்றியமைக்கப்பட்டது.

10-சன்டன்ஸ் லாட்ஜ்கள், கனானஸ்கிஸ் பிரதேசம்.அல்பேர்ட்டா

அல்பேர்ட்டாவின் கம்பீரமான றொக்கி மலைத்தொடர்களில் அமைந்துள்ளது. சாகச முகாம் அனுபவங்கள், மலை ஏறுதல், மீன்பிடித்தல், மலையில் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ஊதப்பட்ட ஓடம் செலுத்துதல் போன்ற அம்சங்கள் இடம்பெறும்.

 

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg