அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டிய ஓட்டுநர் – பரிதாபமாக உயிரிழந்த பெண் பொலிஸ்

Date:2017-05-27

(1495892170)ladypolice001-293x150.jpg

கனடா நாட்டில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியதால் நிகழ்ந்த விபத்தில் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள Colwood நகரில் Sarah Bec4kett(32) என்ற பெண் பொலிஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

காவல் துறையில் 11 ஆண்டுகளாக பணியில் இருந்த இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்தாண்டு ஏப்ரல் 5-ம் திகதி பொலிஸ் வாகனத்தில் ரோந்து சென்றுள்ளார்.

Langford நகரில் உள்ள சாலை ஒன்றில் சென்றபோது எதிரே அசுர வேகத்தில் வந்த கார் ஒன்று பொலிஸ் அதிகாரியின் கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது.

இவ்விபத்தில் காருக்குள் சிக்கி உடல் நசுங்கிய பொலிஸ் அதிகாரி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக விபத்தை ஏற்படுத்திய Kenneth Fenton(28) என்ற நபரை பொலிசார் கைது செய்தனர்.

மேலும், கட்டுப்பாடு இல்லாமல் காரை அசுர வேகத்தில் ஓட்டியதால் விபத்து நிகழ்ந்தது விசாரனையில் தெரியவந்துள்ளது.

நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்துள்ள நிலையில், பெண் பொலிசார் உயிரிழந்ததற்கு ஓட்டுனர் தான் காரணம் என நேற்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

எனினும், குற்றவாளி எவ்வித கருத்தும் தெரிவிக்கமால் நீதிமன்றத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

எதிர்வரும் யூன் 6-ம் திகதி நபர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படும்போது அவர் மீதான குற்றத்திற்கு நீதிபதி தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg