கன்சவேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நாள் இன்று!

Date:2017-05-27

(1495892283)leader-293x150.jpg

ரொறொன்ரோ-மத்திய கன்சவேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இறுதி வாக்கெடுப்பு இன்று இடம்பெறுகின்றது. முன்னாள் அமைச்சரவை அங்கத்தவர்கள் முதல் இது வரை பொது காரியாலயம் வைத்திராதவர்கள் உள்ளிட்ட  13- போட்டியாளர்கள் இப்பதவிக்கு போட்டியிடுகின்றனர். 259,000மக்கள் வரை வாக்களிக்க தகுதியானவர்களாக உள்ளனர்.
ஒற்றுமைக்கு ஒரு கருப்பொருள் தேவை எனும் பட்சத்தில், போட்டியாளர் எரின் ஓ’ ரூல் எங்கள் ஐக்கியத்திற்கு தலைவர் ஒருவர் தேவையில்லை ஏனெனில் நாம் பிரிக்கப்பட்டிருக்கவில்லை என தெரிவித்தார்.
வினிபெக் மருத்துவர் டான் லின்ட்சே, முன்னாள் கபினெட் மந்திரி ரோனி கிளெமென்ட், மற்றும் பிரபல தொழிலதிபர் கெவின் ஓ’ லிரே ஆகிய மூன்று போட்டியாளர்கள் விலகி விட்டனர்.
காலந்தாழ்த்தி விலகியதால் மூன்றாமவரின் பெயர் வாக்கு சீட்டில் இருக்குமென தெரிவிக்கப்படுகின்றது.
இவர் சில வாக்குகளை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சனிக்கிழமை வெற்றியாளரை அறிவிப்பதற்கு முன்னர் பல தடவைகள் வாக்கு எண்ணிக்கை தொடராலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வெற்றியாளரை அறிவிப்பதற்கு முன்னதாக இடைக்கால தலைவர் றோனா அம்ப்றோஸ் உரையாற்றுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
2015ல் கன்சவேட்டிவ் அரசாங்கம் தோல்வியடைந்த பின்னர் பிரதம மந்திரி Stephen Harper தலைவர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து அம்ப்றோஸ் பதவியை ஏற்றார்.

 

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg