சிரியாவில் ஐ.எஸ். தளங்கள் மீது துருக்கி விமானங்கள் குண்டு வீச்சு

Date:2016-11-15

(1479179994)201611150310392573_Turkey-planes-shells-bomb-on-Syria-IS-bases_SECVPF (1).gif

இஸ்தான்புல்,

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரில், கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக துருக்கி படைகள் களமிறங்கி உள்ளது. ஐ.எஸ். அமைப்பினரை அழிக்கும் நோக்கில் தாக்குதல் நடத்தி வரும் துருக்கி படைகள், அவ்வப்போது விமானங்கள் மூலம் குண்டுமழை பொழிந்து வருகின்றன.

அந்தவகையில் துருக்கியின் எல்லையில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள சிரியாவின் அல் பாப் நகரை ஐ.எஸ். அமைப்பிடம் இருந்து மீட்க துருக்கிப்படைகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தின. அங்கு அமைக்கப்பட்டு இருந்த ஐ.எஸ். அமைப்பினரின் கட்டுப்பாட்டு மையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் துருக்கி போர் விமானங்கள் குண்டுவீசி தாக்கின.

இதில் ஐ.எஸ். அமைப்பினரின் கட்டுப்பாட்டு தளங்கள், வெடிபொருள் குடோன் மற்றும் பாதுகாப்பு நிலைகள் என பல்வேறு பகுதிகள் பலத்த சேதமடைந்ததாக துருக்கி ராணுவம் தெரிவித்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையே அந்த பிராந்தியத்தில் நடந்து வரும் சண்டையில் 9 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். 52 பேர் பலத்த காயமடைந்தனர்.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg