ஆண்டுக்கு ஒரு டாலர் மட்டுமே சம்பளம் வாங்குவேன் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வான டிரம்ப் அதிரடி அறிவிப்பு

Date:2016-11-15

(1479180530)201611150048444354_Donald-Trump-Says-He-Will-Take-1-Salary-as-President_SECVPF.gif


வாஷிங்டன்,

ஆண்டுக்கு ஒரு அமெரிக்க டாலர் மட்டுமே சம்பளம் வாங்குவேன் என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.

ஒரு டாலர் சம்பளம்
அண்மையில் நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டொனால்டு டிரம்ப். அவர் நேற்று முன்தினம் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி சேனலான சி.பி.எஸ்.க்கு பேட்டி அளித்தார். அப்போது பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அவர் ஆச்சரியப்படுத்தினார்.

அமெரிக்க ஜனாதிபதி பணிக்காக வழங்கப்படும் ஆண்டு சம்பளம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப், ‘‘ஜனாதிபதி பணிக்கு வழங்கப்படும் ஆண்டு சம்பளம் எவ்வளவு என்பது எனக்குத் தெரியாது (4 லட்சம் அமெரிக்க டாலர்கள்– இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 கோடியே 60 லட்சம்). அது எவ்வளவு தொகையாக இருந்தாலும், ஆண்டுக்கு ஒரு அமெரிக்க டாலரை (ரூ.65) மட்டுமே நான் சம்பளமாக வாங்குவேன்’’ என்றார்.

விடுமுறை எடுக்கமாட்டேன்
ஜனாதிபதி பதவியின்போது எவ்வளவு விடுமுறை காலம் எடுப்பீர்கள்? என்ற மற்றொரு கேள்விக்கு டிரம்ப் மிகவும் தீவிரமாக பதில் அளித்தார்.

அவர் கூறுகையில், ‘‘நமக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் மக்களின் நலனுக்காக செய்தாகவேண்டும். வரிகளை குறைக்கவேண்டும். சுகாதார நலத்திட்டங்களை மேம்படுத்தவேண்டும். எனவே விடுமுறை காலம் எதையும் எடுக்க மாட்டேன்’’ என்று தடாலடியாக அறிவித்தார்.

வேதனை அளிக்கிறது
உங்களது வெற்றிக்கு பிறகு நாட்டில் முஸ்லிம்கள், ஆப்பிரிக்க–அமெரிக்கர்கள், தென்அமெரிக்கர்கள் மீது ஆங்காங்கே தாக்குதல் நடப்பதாகவும், அவர்களுக்கு எதிராக குற்றச் செயல்கள் நடைபெறுவதாகவும் தகவல்கள் வருகின்றவே? என்ற கேள்விக்கு கவலையுடன் டிரம்ப் பதில் அளித்தார்.

‘‘இதுபோன்ற சம்பவங்களை கேட்பது எனக்கு வேதனை அளிக்கிறது. இதை உடனடியாக நிறுத்தவேண்டும். இதை உங்களுடைய இந்த கேமரா முன்பாகவே சொல்கிறேன். உடனடியாக இந்த தாக்குதல்களை நிறுத்துங்கள். இதுபோன்ற செயல்களை யாரும் செய்யக் கூடாது. இது பயங்கரமானது. இந்த நாட்டை நான் ஒருங்கிணைப்பேன். எனவே யாரும் பயப்படவேண்டாம்’’ என்று உறுதி அளித்தார்.

உங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடக்கிறதே? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘‘சில நேரங்களில் தொழில்ரீதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் இதுபோல் செயல்படுவது வழக்கம் என்று கருதுகிறேன்’’ என்று கேலியாக கூறினார்.

சீன அதிபர் பேச்சு
இதற்கிடையே டிரம்ப்பை சீன அதிபர் ஷின்பிங் நேற்று டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, இரு நாடுகளின் உறவுகள் மேம்படுவதற்கு நாம் ஒத்துழைத்து செயல்படுவதுதான் ஒரே தேர்வு என்று அவரிடம் வலியுறுத்தினார்.

அதற்கு டிரம்ப்பும் சீனாவுடன் ஒத்துழைத்து செயல்பட தான் தயாராக இருப்பதாக கூறினார் என சீன வட்டாரங்கள் தெரிவித்தன.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டங்களில் டொனால்டு டிரம்ப், சீனாவை கடுமையாக தாக்கி பேசி வந்தார் என்பதும் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு 45 சதவீத அளவிற்கு வரி விதிப்போம் என்றும் டிரம்ப் கூறி வந்தார் என்பதும் நினைவுகூரத்தக்கது.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg