நியூசிலாந்தில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Date:2016-11-15

(1479180739)201611150037104488_New-Zealand-hits-by-quake-again-impacts-normal-life_SECVPF.gif

வெலிங்டன்,

நியூசிலாந்தின் தெற்கு பகுதி நகரான கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 7.8 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கத்தின் தாக்கம் நாடு முழுவதிலும் பரவலாக உணரப்பட்டது.

நீண்டநேரம் நீடித்த இந்த நிலநடுக்கம் மக்களை பீதியடைய செய்தது. அவர்கள் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். பல இடங்களில் கட்டிடங்கள் சேதமடைந்தன. ரோடுகளில் பிளவு ஏற்பட்டு பள்ளமாகின.

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி கிழக்கு கடற்கரையின் பல இடங்களில் 6 அடி உயரத்துக்கு சுனாமி பேரலைகள் எழுந்தன.

இந்த நிலநடுக்கத்தால் பலர் படுகாயம் அடைந்ததாகவும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் முதல் கட்ட தகவல்கள் கூறின. ஆனால் தற்போது நிலநடுக்கத்தால் 2 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்து உள்ளது.

முதலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட நிலஅதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிகிறது. அதில் அதிகபட்சமாக இந்திய நேரப்படி அதிகாலை 5.15 மணியளவில் ரிக்டர் அளவு கோலில் 6.2 புள்ளிகள் அளவில் நிலநடுக்கம் எற்பட்டது.

தொடர் நிலநடுக்கங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. போக்குவரத்து, மின்சாரம், தொலைபேசி சேவை உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டு உள்ளன. குடிநீர் குழாய்களும் உடைந்ததால் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு இருக்கிறது.

நிலநடுக்கத்தை தொடர்ந்து பிரதமர் ஜோன் கீ, தனது அர்ஜென்டினா பயணத்தை ரத்து செய்தார். அவர் தேசிய பேரிடர் மீட்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி மீட்புபணிகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தினார்.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg