இந்தோனேஷியாவில் கிறிஸ்தவ ஆலயத்தில் குண்டுவெடிப்பு: குழந்தை சாவு; 5 பேர் கைது

Date:2016-11-15

(1479180791)201611150105428575_Christian-church-bombings-in-Indonesia--child-mortality-5_SECVPF.gif

ஜகார்த்தா,

முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட இந்தோனேஷியாவில் சமீபகாலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. தலைநகர் ஜகார்த்தாவில் கடந்த ஜனவரி மாதம் ஐ.எஸ். ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் போர்னியோ தீவுக்கு உட்பட்ட கிழக்கு களிமண்டன் மாகாணத்தில், கிறிஸ்தவ ஆலயம் ஒன்றின் கார்கள் நிறுத்துமிடத்தில் நேற்று முன்தினம் திடீரென குண்டுவெடித்தது. இதில் 2 வயது குழந்தை ஒன்று உயிரிழந்தது. 3 பேர் காயமடைந்தனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர் பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் பேரில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தது தெரியவந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்டவர்களுக்கு ஐ.எஸ். இயக்கத்தினருடன் தொடர்பு உண்டா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg