ஏழைகள் நிம்மதியாக தூங்குகிறார்கள் கருப்பு பணம் பதுக்கியவர்கள் தூக்கம் இன்றி தவிக்கின்றனர் பிரதமர் மோடி பேச்சு

Date:2016-11-15

(1479181097)201611150316095273_Poor-people-sleep-peacefullyNarendra-Modi_SECVPF.gif

காசியாபூர்,

ரூ.500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் ஏழைகள் நிம்மதியாக தூங்குகிறார்கள். கருப்பு பணம் பதுக்கியவர்கள்தான் தூக்கமின்றி தவிக்கின்றனர் என்று பிரதமர் மோடி கூறினார்.

மோடி தாக்கு

உத்தரபிரதேச மாநிலம் காசியாபூர் நகரில் பா.ஜனதா சார்பில் நடந்த சட்டசபை தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது குறித்து எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி கட்சிகளை அவர் மறைமுகமாக தாக்கிப் பேசினார்.

கூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது:-

ஏழைகளுக்கு நிம்மதி தூக்கம்

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் ஏழைகள் தற்போது நிம்மதியாக உறங்குகின்றனர். ஆனால், கருப்பு பணம் வைத்திருக்கும் பணக்காரர்கள்தான் தூக்கமின்றி தவிக்கிறார்கள். தூங்குவதற்காக தூக்க மாத்திரையை தேடி ஓடுகின்றனர்.

அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் சாமானிய மக்கள் படும் சிரமத்தையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் நன்கு அறிவேன்.

கட்சிகளுக்கு கவலை

நீங்கள்(காங்கிரஸ்) அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்பு சில அரசியல் கட்சித் தலைவர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். ஏனென்றால் அவர்கள் மேடைகளில் எப்போதும் ரூபாய் நோட்டு மாலைகளையே அணிந்து பழக்கப்பட்டவர்கள்.

இப்போது அந்த ரூ.500, ரூ.1,000 நோட்டு மாலைகள் எல்லாம் குப்பை கூடையில் போடுவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி இல்லை.

சிலர் முகத்தில் புன்னகையுடன், மோடி நீங்கள் மிகவும் நல்லதொரு பணியை செய்து இருக்கிறீர்கள் என்று பாராட்டுகின்றனர். ஆனால் அவர்களது தலைவர்கள், தங்களது தொண்டர்களை என்னை எதிர்க்கும்படி தூண்டிவிடுகின்றனர்.

மக்களின் ஆதரவு

எனது நடவடிக்கை மிகவும் பலம் வாய்ந்தவர்களை அதிகமாக பாதித்து இருக்கிறது. அவர்கள் நிறைய பணம் வைத்திருப்பதால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனாலும் ஏழைகளின் நலனுக்காக, வலிமையானவர்களுக்கு எதிராக போராடுவதற்காக ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து இருக்கிறேன்.

எனது நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவு அளித்திருக்காவிட்டால் இன்று ஊழல்வாதிகளும், கள்ளச்சந்தைக்காரர்களும் இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்க மாட்டார்கள்.

தப்ப முடியாது

இன்று பலர் தங்களிடம் இருக்கும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை நதியில் வீசுகின்றனர். கங்கையில் இப்படி பணத்தை வீசுவதால் உங்களுடைய பாவங்களை நீங்கள் போக்கிவிட முடியாது.

பணத்தை சாக்கு மூட்டைகளில் கட்டி குப்பைத் தொட்டிகளிலும், சாக்கடைகளிலும் வீசுகிறவர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடிக்கப்படுவார்கள். அப்போது தங்களுடைய பணத்துக்கு அவர்கள் கணக்கு சொல்லியே ஆகவேண்டும்.

நம்மிடம் வளர்ச்சி அடைவதற்கு தேவையான பணம் இல்லை என்று கூற முடியாது. ஆனால், இதில் உண்மை என்னவென்றால், அந்த பணம் எங்கே இருக்கக் கூடாதோ அங்கே குவிந்து இருப்பதுதான் பிரச்சினையே. கருப்பு பண விவகாரத்தில் இனி நேர்மையற்றவர்கள் எந்த வழியிலும் தப்ப முடியாது.

பொறுத்து கொள்ளுங்கள்

பாராளுமன்ற தேர்தலின்போது, ஊழலுக்கு எதிராக போராடுவேன் என்று உறுதிமொழி அறிவித்தேன். அதைத்தான் இப்போது நிறைவேற்றி இருக்கிறேன். ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் இடையூறுகள் தற்காலிகமானதுதான். இந்த சிரமங்கள் மறைவதற்கு சிறிதுகாலம் பிடிக்கலாம். புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வது ஒரு மிகப்பெரிய பணி. இதற்காகத்தான் டிசம்பர் 30-ந் தேதிவரை 50 நாட்கள் அவகாசம் கேட்டு இருக்கிறேன்.

வங்கி ஊழியர்கள் இதில் உதவி செய்வதற்காக இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். ஏழைகளின் நலனுக்காக இந்த 50 நாள் அசவுகரியத்தை பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன். இந்த சிரமத்தை மக்கள் பொறுத்துக் கொண்டால் ஊழல் நாட்டை விட்டே ஓடிவிடும்.

மகா யாகம்

ஒரு மிகப்பெரிய கட்சி (காங்கிரஸ்) நாட்டில் அவசர நிலையை அறிவித்து நாட்டின் தலைவர்களை 19 மாதங்கள் சிறைக்குள் தள்ளியது. இந்த தேசத்தையே சிறைச்சாலையாக மாற்றியது. பத்திரிகைகளை தணிக்கை செய்தது.

அதேநேரம் ஊழலையும், கருப்பு பணம் என்னும் பயங்கரம், நேர்மையின்மையை ஒழிப்பதற்காக நான் 50 நாட்கள் அவகாசம் கேட்டு இருக்கிறேன். அதற்காகத்தான் இந்த மகா யாகத்தை (ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது) தொடங்கி இருக்கிறேன். அது டிசம்பர் 30-ந் தேதி வரை தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார். 

ஏழைகளுக்கு பிடித்த ‘ஸ்டிராங் டீ’

கருப்பு பணத்துக்கு எதிரான தனது அதிரடி நடவடிக்கை பற்றிய பேச்சின் இடையே, மோடி தான் இளைஞனாக இருந்தபோது டீ விற்ற அனுபவத்தை மீண்டும் நினைவு கூர்ந்தார்.

அவர் கூறுகையில், “நான் சிறுவயதில் டீ விற்றபோது, ஏழைகள் எப்போதுமே ‘ஸ்டிராங் டீ’யைத்தான் விரும்பிக் கேட்டு குடிப்பார்கள். அது சற்று கசப்பாக இருக்கும். ஆனால் பணக்காரர்களுக்கு இந்த டீயின் சுவை பிடிக்காது. இதனால் அதை வேண்டாம் என்று ஒதுக்குவார்கள்.

அதுபோலத்தான் இப்போது ரூ.500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்னும் ஸ்டிராங் டீ வினியோகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதை ஏழைகள் விரும்பிக் குடிக்கின்றனர். பணம் நிறைய சேர்த்து வைத்துள்ள பணக்காரர்களுக்கு அது மோசமான சுவையாகத் தெரிகிறது” என்று குறிப்பிட்டார். 

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg