- ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 105 பொதுமக்கள் பலியானது உறுதி
- கிரீஸ்: கார் குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் முன்னாள் பிரதமர் லுகாஸ்
- ’உங்களோட தொந்தரவா போச்சு’ - அமெரிக்க ஊடகம் மீது டிரம்ப் பாய்ச்சல்
- ‘பனாமா கேட்’ ஊழல்: நவாஸ் ஷெரீப் பதில் அளிக்க கேள்வி பட்டியல் - கூட்டு புலனாய்வுக்குழு அனுப்பியது
வங்கிகளுக்கு விடுமுறை வடமாநில ஏ.டி.எம். மையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
புதுடெல்லி,
குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு வடமாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் ஏ.டி.எம். மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
வங்கிகளுக்கு விடுமுறை
நேற்று, குருநானக் ஜெயந்தி விழாவையொட்டி வடமாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டதால் மக்கள் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை மாற்ற முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கூட கையில் பணம் இல்லாத சூழ்நிலை உருவானது. இதனால் மக்கள் ஏ.டி.எம். மையங்களுக்கு படையெடுத்தனர்.
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் அதிகாலை முதலே ஏ.டி.எம். மையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பல இடங்களில் ஏ.டி.எம். மையங்கள் முறையாக இயங்கவில்லை.
ஏ.டி.எம். மையத்தை அடித்து நொறுக்கினர்
மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்ததால் முறையாக இயங்கிய ஒரு சில ஏ.டிஎம். மையங்களிலும் சீக்கிரமே பணம் தீர்ந்து போனது. இதனால் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருத்த மக்கள் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மேற்குவங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் சரியாக இயங்காத எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மையத்தை பொது மக்கள் அடித்து நொறுக்கினர்.
தினாஜ்பூர் மாவட்டத்தில் போலீஸ் சோதனையின்போது ஒரு வீட்டில் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பிலான ரூ.1,000 நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.