ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது டெஸ்ட்: குயின்டான் டீ காக் சதத்தால் தென் ஆப்பிரிக்க அணி 326 ரன்கள் குவிப்பு

Date:2016-11-15

(1479181721)201611150058562406_2nd-Test-against-AustraliaSouth-African_SECVPF.gif


ஹோபர்ட், 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் குயின்டான் டீ காக் சதத்தால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்து ஆல்–அவுட் ஆனது.

2–வது டெஸ்ட் கிரிக்கெட்
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி 177 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா–தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹோபர்ட்டில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 85 ரன்னில் சுருண்டது. சொந்த மண்ணில் கடந்த 32 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவன் சுமித் 48 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

குயின்டான் டீ காக் சதம்
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. பவுமா 38 ரன்னுடனும், குயின்டான் டீ காக் 28 ரன்னுடனும் இருந்தனர். மழை காரணமாக 2–வது நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

நேற்று 3–வது நாள் ஆட்டம் நடந்தது. பவுமா, குயின்டான் டீ காக் ஆகியோர் தொடர்ந்து ஆடினார்கள். இருவரும் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். அடித்து ஆடிய விக்கெட் கீப்பர் குயின்டான் டீ காக் சதம் அடித்தார். 12–வது டெஸ்டில் விளையாடும் அவர் அடித்த 2–வது சதம் இதுவாகும். இதன் மூலம் குறைந்த வயதில் (23 வயது) ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை குயின்டான் டீ காக் பெற்றார். தனது கடைசி 5 டெஸ்ட் இன்னிங்சில் குயின்டாக் டீ காக் தொடர்ச்சியாக 50–க்கு அதிகமாக ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்கா 326 ரன்கள்
குயின்டான் டீ காக் 143 பந்துகளில் 17 பவுண்டரியுடன் 104 ரன்கள் எடுத்த நிலையில் ஹேசில்வுட் பந்து வீச்சில் போல்டு ஆனார். 6–வது விக்கெட்டுக்கு பவுமா–குயின்டான் டீ காக் இணை 144 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய மண்ணில் தென் ஆப்பிரிக்க அணி 6–வது விக்கெட்டுக்கு சேர்த்த அதிகபட்ச ரன் இதுவாகும். ஹேபர்ட்டில் 6–வது விக்கெட்டுக்கு வெளிநாட்டு அணி எடுத்த அதிகபட்ச ரன்னும் இது தான். அடுத்து பவுமா 74 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 100.5 ஓவர்களில் 326 ரன்கள் எடுத்து ஆல்–அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹேசில்வுட் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 121 ரன்
241 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 36 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்தது. ஜோபர்ன்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும், டேவிட் வார்னர் 45 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் கைல் அப்போட் கைப்பற்றினார். உஸ்மான் கவாஜா 56 ரன்னுடனும், கேப்டன் ஸ்டீவன் சுமித் 18 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 4–வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg