தேசிய ஜூனியர் தடகள போட்டி: கேரள அணி ஒட்டு மொத்த சாம்பியன் தமிழகத்திற்கு 2–வது இடம்

Date:2016-11-15

(1479181898)201611150029563757_National-Junior-Athletics-Competition--2nd-place-in-Tamil_SECVPF.gif

கோவை,

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 32–வது தேசிய ஜூனியர் தடகள போட்டி, கோவை நேரு விளையாட்டு அரங்கில் கடந்த 5 நாட்களாக நடைபெற்றது. இதில் 25 மாநிலங்களை சேர்ந்த 2,369 வீரர்–வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினார்கள். 14, 16, 18, 20 ஆகிய வயது பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 273 புள்ளிகள் பெற்று அரியானா மாநிலம் சாம்பியன் பட்டம் வென்றது. பெண்கள் பிரிவில் 248 புள்ளிகள் பெற்று தமிழகம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 429 புள்ளிகள் பெற்று கேரள மாநிலம் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. 413 புள்ளிகளுடன் தமிழகம் 2–வது இடத்தை பெற்றது. இந்த போட்டியில் தமிழகம் மொத்தம் 26 தங்கப்பதக்கங்கள் வென்றது.

பரிசளிப்பு விழாவுக்கு தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம் தலைமை தாங்கி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினார். இந்த போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த தமிழக வீரர்–வீராங்கனைகளுக்கு முறையே, ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. விழாவில் தமிழ்நாடு தடகள சங்க பொருளாளர் லதா, கோவை மாவட்ட தடகள சங்க தலைவர் டாக்டர் தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg