- ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 105 பொதுமக்கள் பலியானது உறுதி
- கிரீஸ்: கார் குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் முன்னாள் பிரதமர் லுகாஸ்
- ’உங்களோட தொந்தரவா போச்சு’ - அமெரிக்க ஊடகம் மீது டிரம்ப் பாய்ச்சல்
- ‘பனாமா கேட்’ ஊழல்: நவாஸ் ஷெரீப் பதில் அளிக்க கேள்வி பட்டியல் - கூட்டு புலனாய்வுக்குழு அனுப்பியது
100 ரூபாய் நோட்டுகளை போதிய அளவில் வெளியிட வேண்டும்: வங்கி ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தல்
வடோதரா:
இந்திய வங்கிகள் சங்கத்துக்கு அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.நாகராஜன், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் ஆகியோர் ஒரு கடிதம் எழுதி உள்ளனர். அதில் அவர்கள் கூறி இருப்பதாவது:-
முறையான திட்டமிடல் மற்றும் தயார்நிலை இல்லாமல், ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நாடு முழுவதும் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. ஏ.டி.எம்.கள் செயல்படாததால், பழைய நோட்டுகளை மாற்ற வங்கி கிளைகளுக்கு மக்கள் படையெடுத்து வருகிறார்கள். இதனால் வங்கி அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் பணி நெருக்கடி ஏற்படுகிறது.
இந்த குழப்பநிலையை வங்கி ஊழியர்கள் மட்டுமின்றி வாடிக்கையாளர்களாலும் தாங்க முடியாது.
பழைய ரூ.500 நோட்டுகளை தடை செய்து விட்டு, புதிய ரூ.500 நோட்டுகளை உரிய நேரத்தில் வெளியிடாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.
அன்றாட செலவுகளுக்கு தேவைப்படும் 100 ரூபாய் நோட்டுகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை கொடுக்கிறார்கள். அதை வாடிக்கையாளர்கள் விரும்புவது இல்லை.
100 ரூபாய் நோட்டுகளின் தேவைக்கும், வினியோகத்துக்கும் இடையே பெரும் இடைவெளி இருப்பதை ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் முழுமையாக உணர்ந்திருக்க வேண்டும்.
உதாரணமாக, 2015-2016-ம் நிதி ஆண்டில், 535 கோடி 100 ரூபாய் நோட்டுகள் தேவைப்பட்டன. ஆனால், 490 கோடி நோட்டுகள்தான் சப்ளை செய்யப்பட்டன.
ஆகவே, வங்கிகளுக்கு நெருக்கடியை குறைப்பதற்காகவும், வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி ஏற்படவும் ரூ.100 மற்றும் புதிய ரூ.500 நோட்டுகளை போதுமான அளவில் ரிசர்வ் வங்கி வெளியிடுவதை உறுதி செய்யுமாறு இந்திய வங்கிகள் சங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.