கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விற்பனை 60 சதவீதம் பாதிப்பு

Date:2016-11-15

(1479182131)201611150726270239_60-percent-of-vegetables-sales-impact-at-CMBT-market_SECVPF.gif

சென்னை:

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வியாபாரிகள் வாங்க மறுத்துவருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகளை கொண்டுவரும் வியாபாரிகளும் புதிய ரூபாய் நோட்டுகள் தான் கேட்கின்றனர். 100 ரூபாய் நோட்டுக்கும் பயங்கர தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் காய், கனி, மலர் மொத்த வியாபாரிகள் நலசங்க துணைத்தலைவர் சுகுமார் கூறியதாவது:-

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மறுநாள் முதலே கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு சிக்கல்கள் ஆரம்பித்தது. விற்பனையையும் பெரிய அளவில் பாதித்து இருக்கிறது. காய்கறிகள் விற்பனை 60 சதவீதம் வரை பாதிக்கப்பட்டு இருக்கிறது. 40 சதவீதம் விற்பனையும் பழைய நோட்டுகளை வாங்கினால் தான் நடக்கிறது.

இது ஒருபுறம் இருக்க காய்கறிகள் விற்பனை குறைந்ததால், அதன் விலை கடும் வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. பொதுவாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் முகூர்த்த நாட்கள் அதிகம். இந்த சமயத்தில் தான் எங்களுக்கு விற்பனை நன்றாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு அந்த நிலை இல்லை. விற்பனை பாதிப்பு டிசம்பர் வரை நீடிக்கும் என்று தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை நிலவரம் (ஒரு கிலோ) வருமாறு:-

கத்தரிக்காய் - ரூ.4 முதல் ரூ.10 வரை, தக்காளி ரூ.5 முதல் ரூ.7 வரை, முருங்கைக்காய் ரூ.15 முதல் ரூ.25 வரை, வெண்டைக்காய் ரூ.5 முதல் ரூ.10 வரை, கொத்தவரங்காய் ரூ.15, கோவைக்காய் ரூ.10, அவரைக்காய் ரூ.10 முதல் ரூ.20 வரை, பீன்ஸ் ரூ.8 முதல் ரூ.18 வரை, கேரட் ரூ.10 முதல் ரூ.18 வரை, முட்டைக்கோஸ் ரூ.10, சவ்சவ் ரூ.5 முதல் ரூ.10 வரை, நூக்கல் ரூ.5 முதல் ரூ.10 வரை, சேனைக்கிழங்கு ரூ.20 முதல் ரூ.22 வரை, சேப்பக்கிழங்கு ரூ.15 முதல் ரூ.20 வரை, உருளைக்கிழங்கு ரூ.15 முதல் ரூ.20 வரை, புடலங்காய் ரூ.5, பீர்க்கங்காய் ரூ.10, மிளகாய் ரூ.10 முதல் ரூ.20 வரை, இஞ்சி ரூ.20 முதல் ரூ.25 வரை, சின்ன வெங்காயம் ரூ.20 முதல் ரூ.30 வரை, பல்லாரி ரூ.14 முதல் ரூ.18 வரை, தேங்காய் ரூ.10 முதல் ரூ.18 வரை (ஒன்று), வாழைக்காய் ரூ.7 முதல் ரூ.10 வரை (ஒன்று).

கோயம்பேடு உணவுதானிய மொத்த விற்பனை அங்காடியிலும் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்தம் உள்ள 500 கடைகளில் 200 கடைகள் மட்டுமே திறந்திருக்கின்றன.

இதுகுறித்து வியாபாரி பி.முத்துபாண்டியன் கூறுகையில், ‘உணவு தானிய அங்காடியில் சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.2½ கோடி விற்பனை நடைபெறுவது வழக்கம். ஆனால் பணப் பிரச்சினை காரணமாக தற்போது ரூ.50 லட்சத்துக்கு மட்டுமே விற்பனையாகிறது’ என்றார். 

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg