வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாவது நாள் விவாதம்!

Date:2016-11-15

(1479183194)625.117.560.350.160.300.053.800.210.160.90 (2).jpg

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் பாராளுமன்றத்தில் ஆறாவது நாளாக இன்றும் நடைபெறவுள்ளது.

இன்று காலை 9.30 இற்கு பாராளுமன்றம் கூடும் போது, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடத்தப்படவுள்ளது.

இந்த விவாதம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பை அன்றைய நாள் மாலை 5 மணிக்கு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், டிசம்பர் 10 ஆம் திகதி வரை விவாதம் இடம்பெறவுள்ளது.

டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆம் திகதி நிதி அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் பல்வேறு எதிர்புகள் எழுந்துள்ள நிலையில், மக்கள் பிரதிநிதிகள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg