- ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 105 பொதுமக்கள் பலியானது உறுதி
- கிரீஸ்: கார் குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் முன்னாள் பிரதமர் லுகாஸ்
- ’உங்களோட தொந்தரவா போச்சு’ - அமெரிக்க ஊடகம் மீது டிரம்ப் பாய்ச்சல்
- ‘பனாமா கேட்’ ஊழல்: நவாஸ் ஷெரீப் பதில் அளிக்க கேள்வி பட்டியல் - கூட்டு புலனாய்வுக்குழு அனுப்பியது
உணவு பொருட்களின் விலை குறித்து கனடியர்கள் கவலை.
ரொறொன்ரோ- கால் பங்கு கனடியர்கள் உணவு பொருட்களின் விலை குறித்து கவலை கொண்டுள்ளனர் எனவும் இதனால் மாறிக்கொண்டு வரும் உணவு பொருட்களின் விலைகளை சமாளிக்க தங்கள் பொருட்களை வாங்கும் பழக்கவழக்கங்களை மாற்றியமைக்க தொடங்கியுள்ளனரென தெரிய வந்துள்ளது. அண்மையில் நடாத்தப்பட்ட புதிய ஆய்வொன்றின் மூலம் இத்தகவல் வெளிவந்துள்ளது. அக்டோபர் 8முதல் 31ற்கு இடைப்பட்ட காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வயது வந்த பெரியவர்களிடம் நடாத்தப்பட்ட ஆய்வு மூலம் இந்த விலை ஊசலாட்டம் மக்கள் அடிப்படை அல்லது அத்தியாவசிய உணவு பொருட்களை எவ்வாறு தெரிவு செய்வது என மறு பரிசீலனை செய்ய தூண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடங்களில் குறைந்த-வருமானம், குறைந்த-கல்வி அறிவு கொண்ட பெண்கள் இது குறித்து அதிக கவலை கொண்டுள்ளனர். இறைச்சி வகைகள் பாரிய ஏற்றம் கொண்டுள்ளன. பாலுணவுப்பொருட்கள் வழக்கத்தை விட ஏற்ற இறக்கம் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. சிலர் மளிகை கடைகளில் பேரம் பேசுவதாகவும் பலர் மலிவு விலை பொருட்களை குவிப்பதாகவும் வேறு சிலர் மாற்று பொருட்களை தேடுகின்றனர் எனவும் அறியப்படுகின்றது. சில கனடியர்கள் உறைந்த உணவு பொருட்களை நாடுகின்றனர். விலையுயர்ந்த பழங்கள் மரக்கறிகளிற்கு பதிலாக பழச்சாறுகளை நாடுகின்றனர்.