பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் மீது அவமதிப்பு நடவடிக்கை

Date:2017-08-11

(1502422998)201708110424582665_Imagination-action-on-Imran-Khan_SECVPF.gif

இஸ்லாமாபாத், 

இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சியில் இருந்து பிரிந்து வந்த அக்பர் எஸ். பாபர் என்பவர் தேர்தல் கமி‌ஷனில் மனு தாக்கல் செய்தார். அதை தேர்தல் கமி‌ஷன் தீர்ப்பாயம் விசாரணைக்கு ஏற்றது.

இதில் கடந்த மாதம் 10–ந் தேதி இம்ரான்கான் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் அவர், தனிப்பட்ட ஒரு நபர் மீது தேர்தல் கமி‌ஷன், அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முடியாது, அந்த உரிமை சுப்ரீம் கோர்ட்டுக்கும், ஐகோர்ட்டுகளுக்கும்தான் உண்டு என கூறி இருந்தார்.

இம்ரான்கான் சார்பில் ஆஜரான வக்கீல் பாபர் அவான் வாதிடுகையில், ‘‘தேர்தல் கமி‌ஷன், ஐகோர்ட்டுக்கு சமம் என்றால், முழு அமர்வு தினந்தோறும் இதில் விசாரணை நடத்துமா?’’ என கேள்வி எழுப்பினார். தேர்தல் கமி‌ஷனின் முழு அமர்வு, தீர்ப்பு வழங்கினால் அதை எதிர்த்து எங்கு மேல்முறையீடு செய்வது எனவும் அவர் வினவினார்.

இதையடுத்து தேர்தல் கமி‌ஷன் தீர்ப்பாயம் தனது தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்த நிலையில், தேர்தல் கமி‌ஷனின் 5 உறுப்பினர்கள் அடங்கிய தீர்ப்பாயம் நேற்று தனது தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பில், இம்ரான்கான் மீதான அவமதிப்பு வழக்கில் விசாரணை நடத்துவது தனது அதிகார வரம்பில் வருகிறது என திட்டவட்டமாக கூறி, இம்ரான்கானின் பதில் மனுவை அதிரடியாக நிராகரித்து விட்டது. இதன் காரணமாக இம்ரான்கான் மீதான அவமதிப்பு நடவடிக்கையில் தேர்தல் கமி‌ஷன் தீர்ப்பாயம் தொடர்ந்து விசாரணை நடத்தும்.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg