ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையுடன் மோதல் 11 தலீபான் பயங்கரவாதிகள் பலி

Date:2017-08-11

(1502423114)201708110422049375_Security-in-Afghanistan---Confrontation-with-the-force_SECVPF.gif

காபூல், 

அங்குள்ள பக்திகா மாகாணத்தின் கோமல் மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி நேற்று முன்தினம் வரையில், கோமல் நெடுஞ்சாலையில் தலீபான்கள் தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மலைப்பகுதியில் மறைந்திருந்த தலீபான்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து துப்பாக்கியால் சரமாரியாக சுடத்தொடங்கினர். பாதுகாப்பு படையினரும் சுதாரித்துக்கொண்டு அவர்களை திருப்பிச் சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையேயான இந்த மோதல் பல மணி நேரம் நீடித்தது.

அதன் முடிவில் தலீபான் பயங்கரவாதிகள் 11 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து எல்லை போலீஸ் கமாண்டர் ராஸ் முகமது டோபன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘தலீபான்கள் தொடுத்த தாக்குதலை பாதுகாப்பு படையினர் தீரமுடன் எதிர்கொண்டதில், 11 தலீபான்கள் பலியாகினர். இந்த மாவட்டத்தில் கடந்த 9 நாட்களாக நடந்த தலீபான்கள் தேடுதல் வேட்டையில் இதுவரை 100 தலீபான்கள் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினர் 6 பேரும் வீர மரணம் அடைந்துள்ளனர்’’ என்று கூறினார்.

கோமல் மாவட்டத்தில் கங்காலி பகுதியில் சாலையில் தலீபான்கள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர் ஒருவர், கண்ணிவெடி வெடித்து உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg