நவம்பர் மாதம் இந்தியா வருகிறார் இவாங்கா டிரம்ப்

Date:2017-08-11

(1502423388)201708110851257834_Trump-tweets-Ivanka-participation-in-Global-Entrepreneurship_SECVPF.gif

வாஷிங்டன்,

ஐதரபாத்தில் வரும் நவம்பர் மாதம் தொழில் முனைவோருக்கான உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க பிரநிதிகள் குழுவும் கலந்து கொள்கிறது. இந்த குழுவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப் தலைமை வகிக்கிறார். டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டரில் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். இவாங்கா டிரம்பும் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய பயணம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் குழு சார்பில் உலக தொழில் முனைவோருக்கான மாநாடு, வரும் நவம்பர் மாதம் 28-30 தேதிகளில் ஐதராபாத்தில் நடக்கிறது. இந்த மாநாடு மூலம் இந்தியாவிற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து புதிய தொழில் வாயப்புகளை பெறுவதற்காக நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg