வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை

Date:2017-08-11

(1502424772)201708110320180423_Action-to-link-Adhar-number-with-voter-identity-card_SECVPF.gif

புதுடெல்லி, 

மத்திய அரசின் பல்வேறு உதவி திட்டங்களின் பயன்களை பெற ஆதார் அடையாள அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது, வங்கி கணக்கு தொடங்குவது போன்றவற்றுக்கும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணும் இணைக்கப்படும் என்றும், இதற்கான நடவடிக்கை உரிய நேரத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை ராஜாங்க மந்திரி பி.பி.சவுத்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.

வாக்காளர்கள் பற்றி தகவல்களை அறியும் வகையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களையும் இணைப்பது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டிடம் அனுமதி கோரி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg