பாகிஸ்தான் புதிய பிரதமர் அப்பாஸிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Date:2017-08-11

(1502425115)201708110635054884_PM-EAM-give-best-wishes-to-their-Pak-counterparts_SECVPF.gif

புதுடெல்லி:

பனாமா பேப்பர்ஸ் ஊழல் விவகாரத்தில் அந்நாட்டு நீதிமன்ற உத்தரவை அடுத்து பாகிஸ்தான் பிரதமர் பதவியை நவாஸ் ஷெரீஃப் இழந்தார்.

பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீஃப் பதவி விலகிய நிலையில், புதிய பிரதமராக ஷாகித் கான் அப்பாஸி கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஷாகித் ககான் அப்பாஸிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக்களை தெரிவித்தார். 

அதேபோல், பாகிஸ்தான் நாட்டின் புதிய வெளியுறவுத் துறை மந்திரியாக பொறுப்பேற்றுள்ள காவஜா ஆசிப்புக்கு இந்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கடிதம் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்தியாவுடனான பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண தயாராக இருப்பதாக புதிய பிரதமர் அப்பாஸி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg