உலக தடகள போட்டி 400 மீட்டர் தடை ஓட்டத்தில் நார்வே வீரர் முதலிடம்

Date:2017-08-11

(1502425540)201708110031424969_World-Athletics-Competition_SECVPF.gif

லண்டன், 

16-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு மழைக்கு மத்தியில் நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 25 வயதான நார்வே வீரர் கார்ஸ்டென் வார்ஹோல்ம் 48.35 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். கார்ஸ்டென் டெக்கத்லான் பந்தயத்தில் இருந்து 400 மீட்டர் தடை ஓட்டத்துக்கு மாறியவர் ஆவார். துருக்கி வீரர் யாஸ்மனி கோபெல்லா 48.49 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக் சாம்பியனான அமெரிக்காவின் கெர்ரோன் கிளமென்ட் 48.52 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கம் பெற்றார்.

பெண்களுக்கான குண்டு எறிதலில் 28 வயதான சீனாவின் காங் லிஜியாவ் 19.94 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக் மற்றும் உலக போட்டிகளில் மொத்தம் 5 வெள்ளி, ஒரு வெண்கலம் வென்ற காங் லிஜியாவ்க்கு தங்கப்பதக்கம் நீண்ட நாட்களாக கைநழுவி போனது. அந்த ஏக்கத்தை அவர் இந்த முறை தீர்த்து இருக்கிறார். ஹங்கேரி வீராங்கனை அனிதா மார்டோன் 19.49 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கமும், அமெரிக்க வீராங்கனை மிச்செல் கார்ட்டர் 19.14 மீட்டர் தூரம் வீசி வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்க வீராங்கனை பிலிஸ் பிரான்சிஸ் 49.92 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். பக்ரைன் வீராங்கனை சல்வா இட் நாசர் 50.06 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், அமெரிக்க வீராங்கனை அலிசன் பெலிக்ஸ் 50.08 வினாடியில் பந்தய துரத்தை கடந்து வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

குண்டு எறிதலில் முதல்முறையாக தங்கப்பதக்கம் வென்ற சீன வீராங்கனை காங் லிஜியாவ் அளித்த ஒரு பேட்டியில், ‘இது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தருணமாகும். மழை பந்தயத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. மழை பெய்யாமல் இருந்தால் 20 மீட்டருக்கு மேல் வீசி இருப்பேன். கடந்த காலங்களில் எனது கடின உழைப்புக்கு பலனாக இந்த தங்கப்பதக்கம் கிட்டியது பெருமை அளிக்கிறது’ என்று தெரிவித்தார். 

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg