அரசியலில் இருந்து இளைப்பாறும் கனடாவின் மிக உயர்ந்த முதல்வர்களில் ஒருவர்!

Date:2017-08-11

(1502426483)625.150.560.350.160.300.053.800.245.160.90.jpg

கனடாவின் மிக உயர்ந்த முதல்வர்களில் ஒருவரும் தனது தன்னியல்பான தன்மையினால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவரும் மற்றும் கூர்மையான அறிவாற்றல் மிக்கவருமான சஸ்கற்சுவான் முதல்வர் ஒரு தசாப்தத்தின் பின்னர் அரசியலில் இருந்து இளைப்பாறுகின்றார்.

51-வயதுடைய பிராட் வால் வியாழக்கிழமை தனது முடிவை அறிவித்துள்ளார். ஆனால் புதிய முதல்வர் தெரிவாகும் வரை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சில துறைகளில் தனக்கு ஆர்வம் இருப்பதாக தெரிவித்த வால் எதனையும் தெரிவிக்கவில்லை.

அடுத்து என்ன செய்தாலும் தனது பணிவாழ்க்கையில் முதல்வராக இருந்தது கௌரவமானதென தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 10-வருடங்கள் முதல்வராக இருந்துள்ளார். 2007ல் கனடாவின் மிக பிரபல்யமான முதல்வராக முறையாக தெரிவு செய்யப்பட்டார்.

கடலோரத்திலிருந்து மறு கடலோரம் வரையிலான கனடியர்கள் இவரது தலைமைத்துவத்தை பாராட்டியுள்ளனர்.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg