கல்முனை நகர் அருள் மிகு ஸ்ரீ முருகன் தேவஸ்தான ஏவிளம்பி வருட பிரமோட்சவ பெருவிழா

Date:2017-08-11

(1502426709)625.147.560.350.160.300.053.800.264.160.90 (1).jpg

கல்முனை நகர் அருள்மிகு ஸ்ரீ முருகன் தேவஸ்தான ஏவிளம்பி வருட பிரமோட்சவ பெருவிழா நேற்று (9)காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

கல்முனை நகரின் கண்ணே பன்னெடும் காலமாக ஸ்ரீவள்ளி தேவயானை சமேதரராய் வீற்றிருந்து அருள் பாலிக்கும் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு நேற்று காலை கொடியேற்ற நிகழ்வுகள் நடைபெற்றது.

திருவிழாக்காலங்களில் 6ஆவது நாள் திருவிழாவன்று பாற்குடப்பவனி நிகழ்வும், 8ஆம் திருவிழாவன்று வேட்டைத்திருவிழாவும், அதனைத்தொடர்ந்து 12 ஆம் ஞாயிற்றுக்கிழமை நாள் விசேட நிகழ்வான தேரோட்ட நிகழ்வும் நடைபெறவுள்ளன.

அதனைத்தொடர்ந்து திங்கட்கிழமை தீர்த்தோட்சவ நிகழ்வும், இறுதி நாளான செவ்வாய்க்கிழமை மாலை திருக்கல்யாண உற்சவம், திருவூஞ்சல் நிகழ்வு என்பன நடைபெற்று இவ்வாண்டிற்கான உற்சவ நிகழ்வுகள் இனிதே நிறைவுறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg