அரசில்வாதிகளிடம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வேண்டுகோள்!

Date:2017-08-11

(1502427073)625.147.560.350.160.300.053.800.264.160.90 (3).jpg

அற்பசொற்ப அரசியல் ஆதாயங்களுக்காக இனங்களிடையே விரிசல்களையும், குரோதங்களையும் ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகள் விடுவதை தவிர்க்க வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே குறித்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

அந்த ஊடக அறிக்கையில் மேலும்,

அரசியல்வாதிகள் இனங்களிடையே இனக்குரோதங்களையும், வேற்றுமையினையும் ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகளையும், செய்திகளையும் வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அற்பசொற்ப அரசியல் ஆதாயங்களுக்காக இனங்களிடையே விரிசல்களையும், குரோதங்களையும் ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகள் விடுவதை விடுத்து இன நல்லுறவையும், ஒற்றுமையினையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg