மஹிந்த ஆட்சியின் 43 ஊழல் ஆவணங்கள் கிடப்பில்: சட்டமா அதிபர் திணைக்களத்தால் தாமதம்

Date:2017-08-11

(1502427196)625.147.560.350.160.300.053.800.264.160.90 (4).jpg

மஹிந்த ஆட்சியின் போது இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பான 43 ஆவணங்கள் இன்னும் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

இந்த ஆவணங்கள், நிதிமோசடிகளுக்கு எதிரான பொலிஸாரினால் விசாரணை செய்யப்பட்டுள்ளபோதும், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இன்னும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையினரால் விசாரணை செய்யப்பட்ட முறைக்கேடுகளின் ஆவணங்களே இன்னும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படாமல் உள்ளன.

இவையாவும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இன்னும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படவில்லை.

இது மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஊழல் விசாரணகளை தாமதப்படுத்தும் நடவடிக்கையாகும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg