கனடாவில் வேலை தேட இரண்டாவது சிறந்த நகரம் எது?

Date:2017-10-11

(1507697269)625.150.560.350.160.300.053.800.245.160.90.jpg

"விரைவான வளர்ச்சிக்குட்பட்டு திடீரென வளர்ந்து வரும் ரவுன்" என அழைக்கப்படும் ஹமில்ரன் கனடாவில் வேலை தேட இரண்டாவது மிகச்சிறந்த நகரம் என்ற இடத்தை பிடித்துள்ளது.

BMO தொழிலாளர் சந்தை அறிக்கையின் கடைசியாக கிடைக்கப்பெற்ற தகவல் பிரகாரம் இந்த கணிப்பீடு கிடைத்துள்ளது. ஹமில்ரன் 25புள்ளிகளை தாவி இந்த இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் கெலொவ்னா 14.3 சதவிகிதமாக உயர்ந்து முதலிடத்தை பெற்றுள்ளது.

இந்த நகரம் ஒன்றரை வருடங்களிற்கு முன்னர் வேலை தேடுவதற்கு கனடாவின் மிக மோசமான ஒரு நகரமாக இருந்துள்ளது.

ஐந்தாம் இடத்தில் கிச்சினர் வினிபெக், பார்ரி உள்ளன. வன்கூவர், குவெல்ப், ஒசாவா, ரொறொன்ரோ, மற்றும் விக்டோரியா தொடர்கின்றன.

பிரான்ட்வோட் 13வதாகவும் சென்.கத்தரின்ஸ் 32ஆவதாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg