மெக்சிகோவில் சிறையில் வன்முறை; 13 பேர் பலி

Date:2017-10-12

(1507781022)201710120222498740_Violence-in-prison-in-Mexico-13-killed_SECVPF.gif

மான்டெர்ரி,

சிறை கைதிகள் நேற்று முன்தினம் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் ஒரு கைதி கொல்லப்பட்டார்.

இதையடுத்து, கைதிகள் சிறைக்காவலர்களை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக் கொண்டு, பயங்கர வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து, சிறையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இருப்பினும் அங்கு வன்முறையை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதையடுத்து, அங்கு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். நீண்ட நேரத்திற்கு பிறகு பதற்றம் தணிந்து, சிறையில் இயல்பு நிலை திரும்பியது.

கைதிகளுக்கு இடையேயான மோதல் மற்றும் அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிர் இழந்தனர். இவர்களில் எத்தனை பேர் மோதல் சம்பவத்தில் உயிர் இழந்தனர்? எத்தனை பேர் துப்பாக்கிச்சூட்டில் உயிர் இழந்தனர் என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

மேலும் சிறைக்காவலர்கள் மற்றும் போலீசார் தரப்பில் உயிர் இழப்பு உள்ளதா? என்பது குறித்தும் தகவல்கள் இல்லை.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg