சிரியா: போலீஸ் தலைமையகம் மீது தற்கொலைப்படை தாக்குதல் - 2 பேர் பலி

Date:2017-10-12

(1507781226)201710120432141561_3-suicide-bombers-blew-themselves-in-syria-killing-2-people_SECVPF.gif

டமாஸ்கஸ்:

சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் போலீஸ் தலைமையகம் அமைந்துள்ளது. போலீஸ் தலைமையகத்திற்குள் இரண்டு தீவிரவாதிகள் நுழைய முயன்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால் அந்த தீவிரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை முன்னதாகவே வெடிக்கச் செய்தனர்.

இந்த தாக்குதலில் சில போலீசார் காயமடைந்தனர். உடனே அப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தலைமையகத்தின் பின்புறம் ஒரு தீவிரவாதி இருப்பதை கண்டறிந்த போலீசார் அவனை சுற்றி வளைத்தனர். இதையடுத்து அவனும் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தான். இந்த சம்பவங்களையடுத்து அந்த இடம் போர்க்களம் போல காட்சியளித்தது.

இந்த கோர தாக்குதலில் 2 பேர் பலியானதாகவும், 2 குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அந்நாட்டு உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.

கடந்த 2-ம் தேதி மிடான் போலீஸ் நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg