சூரிய ஒளி மின்தகடு மோசடி விவகாரம்: உம்மன் சாண்டி மீது வழக்கு; கேரள அரசு முடிவு

Date:2017-10-12

(1507781964)201710120034026966_Solar-scam-fraud-issue--Case-against-Oommen-Chandy_SECVPF.gif

திருவனந்தபுரம்,

கேரளாவில் முன்பு உம்மன் சாண்டி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது, வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு சூரிய ஒளி மின்தகடு (சோலார் பேனல்) அமைத்து கொடுப்பது தொடர்பான பணி சரிதா நாயரின் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் பெருமளவில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக சரிதா நாயர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் போது, இந்த திட்டம் தொடர்பாக முதல்–மந்திரி உம்மன் சாண்டி உள்ளிட்ட பலருடன் தான் தொடர்பு வைத்து இருந்ததாகவும், தான் ஏமாற்றப்பட்டதாகவும் சரிதா நாயர் குற்றம்சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, இந்த சூரிய ஒளி மின்தகடு திட்டத்தில் நடந்த ஊழல் குறித்து விசாரிக்க முதல்–மந்திரி உம்மன் சாண்டி கடந்த 2013–ம் ஆண்டு, ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜன் தலைமையில் விசாரணை கமி‌ஷன் ஒன்றை அமைத்தார்.
2016–ம் ஆண்டு நடைபெற்ற கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அரசு தோல்வி அடைந்ததற்கு இந்த சூரிய ஒளி மின்தகடு திட்ட ஊழல் முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது. அந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைமையிலான இடதுசாரி முன்னணி வெற்றி பெற்று பினராயி விஜயன் தலைமையில் புதிய ஆட்சி அமைத்தது.

இந்த நிலையில் முதல்–மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நேற்று மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சூரிய ஒளி மின்திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்–மந்திரி உம்மன் சாண்டி, முன்னாள் மந்திரிகள் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன், ஆர்யாதன் முகமது, முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தம்பனூர் ரவி, பென்னி பெகனன், உம்மன் சாண்டியின் முன்னாள் அலுவலக ஊழியர்கள் டென்னி ஜோப்பன், ஜிக்குமோன் ஜேக்கப், பாதுகாவலர் சலீம் ராஜ் ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர்களுக்கு உதவிய இரு போலீஸ் அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்ய தீர்மானிக்கப்பட்டு உள்ளது.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg