கேரளாவில் பா.ஜனதா அலுவலக வளாகத்தில் குண்டுவெடிப்பு

Date:2017-10-12

(1507782269)201710112304269537_Explosion-at-BJP-office-in-Kerala_SECVPF.gif

கண்ணூர்,

சக்தி வாய்ந்த வெடிகுண்டு நேற்று அதிகாலை இதன் வளாகத்தில் வெடித்தது. இதனால் அலுவலகத்தின் சுவர், ஜன்னல், மேற்கூரை சேதம் அடைந்தது. குண்டுவெடித்த போது அங்கு யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இச்சம்பவம் நடைபெற்ற சில மணி நேரத்தில் பனூர் அருகே கைவெளிக்கால் என்ற இடத்தில் வேன் டிரைவர் ஒருவர் மரத்தடியில் வேனை நிறுத்த முயன்றார். அப்போது புல்வெளியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்து வேன் சேதம் அடைந்தது. வேன் டிரைவர் காயம் அடைந்தார்.

இது பற்றி அறிந்த போலீசார் பா.ஜனதா அலுவலகம் மற்றும் கைவெளிக்கால் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கைவெளிக்கால் பகுதியில் குண்டுவெடித்த பகுதியில் வெடிக்காத குண்டு ஒன்றை கைப்பற்றினர். இதனால் வேறு எங்காவது குண்டு மறைத்து வைக்கப்பட்டு உள்ளதா? என போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கண்ணூர் மாவட்ட பா.ஜனதா அலுவலகம் அருகே நேற்று முன்தினம் பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் நேற்று 2 இடங்களில் குண்டு வெடித்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg