வடமாகாண இளைஞர், யுவதிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Date:2017-10-12

(1507784748)625.147.560.350.160.300.053.800.264.160.90 (4).jpg

வடமாகாணத்தில் இடம்பெறும் தேர்தல்களின் போட்டியிட அதிகளவு இளைஞர், யுவதிகள் ஆர்வம் காட்டியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அடுத்த வருடத்தின் ஆரம்பதில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உள்ளூராட்சி தேர்தல் நடத்துவதற்காக அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கீழ் வட மாகாணத்தில் போட்டியிடுவதற்காக 4000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களில் 2500க்கும் அதிகமானோர் இளைஞர் யுவதிகள் எனவும், மன்னார் மாவட்டத்தை தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும், அதிகமான பெண் பிரதிநிதிகள் உள்ளனர் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விண்ணப்பங்களை ஆராய்ந்து வேட்புரிமை வழங்குவதாக இல்லையா என்பது தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

வேட்புரிமைய வழங்குவது தொடர்பில் இம்முறை தமிழ் தேசிய மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு மேலதிகமாக, அந்த மாகாணங்களிலுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் பரிந்துரைகள் பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதனை தொடர்ந்து அந்த மாகாண விண்ணப்பதாரிகள் இந்த நாட்களில் மாகாண அரசியல்வாதிகளை நாடி செல்வதாக குறிப்பிடப்படுகின்றது.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg