உலகைச்சுற்றி...

Date:2018-03-13

(1520912892)201803130017590524_Around-the-world-_SECVPF.gif

* சிரியாவின் கிழக்கு கூட்டா நகரில் சிக்கித் தவித்து வந்த 26 சிறுவர்கள் உள்பட அப்பாவி மக்கள் 52 பேரை தங்கள் ராணுவம் பத்திரமாக மீட்டு, தற்காலிக அகதிகள் முகாமில் தங்கவைத்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருவதாக ரஷியா கூறி உள்ளது.

* ஜப்பானில் அரசுக்கு சொந்தமான நிலத்தை தனியார் பள்ளிக்கூடத்தின் உரிமையாளருக்கு மிக குறைவான விலையில் விற்றதில், பிரதமர் ஷின்ஜோ அபேவின் மனைவி அகிக்கு தொடர்பு இருப்பதாக ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் தற்போது இந்த ஊழல் வழக்கு தொடர்பான ஆவணங்களில் இருந்து அகியின் பெயர் நீக்கப்பட்டு உள்ளது.

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் சந்தித்து பேசும் வரலாற்று நிகழ்வு விரைவில் நடக்க இருக்கிறது. இந்த சந்திப்பு தொடர்பாக வடகொரியாவுக்கு வேறு எந்த வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

* கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ருவாண்டாவின் தெற்கு மாகாணத்தில் நியாருகுரு என்ற நகரில் உள்ள தேவாலயத்தை மின்னல் தாக்கியது. இதில் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 16 பேர் பலியாகினர். 140 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்கள். 

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg