ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மனு

Date:2018-03-13

(1520913079)201803130127045841_CBI-files-in-Supreme-Court-to-be-dismissed-Petition-of-Rajiv_SECVPF.gif

புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை 1999-ம் ஆண்டு மே 11-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. ஆனால், தான் நிரபராதி என்றும், சுப்ரீம் கோர்ட்டின் அந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்றும் பேரறிவாளன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு சி.பி.ஐ.யின் பதிலை சுப்ரீம் கோர்ட்டு கேட்டிருந்தது.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில், சி.பி.ஐ.யின் பல்நோக்கு ஒழுங்குமுறை கண்காணிப்பு அமைப்பு, பிரமாண மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், “ராஜீவ் காந்தி கொலைச்சதியில் பேரறிவாளனின் பங்கு, சுப்ரீம் கோர்ட்டால் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அவரது மனு முகாந்திரம் இல்லாதது. அதை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg