வங்கி கடன் பெற்று வெளிநாடு செல்பவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யும் மசோதா தாக்கல்

Date:2018-03-13

(1520913443)201803130813033285_Economic-Offenders-bill-tabled-in-lok-Sabha_SECVPF.gif

புதுடெல்லி:

இந்திய வங்கிகளில் இருந்து கோடிக்கணக்கில் கடன் பெற்று அவற்றை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபடும் தொழிலதிபர்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்ற கோடீஸ்வரர்கள் இவ்வாறு கோடிக்கணக்கில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதுடன், வெளிநாட்டுக்கும் தப்பி சென்றுள்ளனர்.

இந்த மோசடிகளுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுப்பதற்கு முன்னரோ, அல்லது நடவடிக்கையின் போதோ இவர்கள் தப்பி செல்வதால் அவர்கள் மீதான குற்ற விசாரணைக்கு தடங்கல்கள் ஏற்படுவதுடன், கோர்ட்டுகளின் விலைமதிப்பில்லா நேரமும் வீணாகிறது. மேலும் வங்கித்துறையின் நிதி ஆரோக்கியமும் சீர்கெடுகிறது.

கோடிக்கணக்கில் வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாடுகளுக்கு தப்பி செல்லும் கோடீசுவரர்களை கையாளுவதற்கு தற்போதைய நிலையில் சிவில் மற்றும் குற்ற வழிமுறைகள் எதுவும் போதுமானதாக இல்லை.

எனவே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவோரின் சொத்துகளை பறிமுதல் செய்யவும், அவற்றை விற்பனை செய்யவும் வகை செய்யும் புதிய மசோதா ஒன்றை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இது நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

‘தப்பியோடும் பொருளாதார குற்றவாளிகள் மசோதா-2018’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதாவின்படி வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாடு தப்பி செல்வோரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு விற்கப்படும். ரூ.100 கோடி மற்றும் அதற்கு மேல் கடன் பெற்று தப்பி ஓடுவோரே இதில் கணக்கில் கொள்ளப்படும்.

தற்போதைய நிதி மோசடி தடுப்புச்சட்டத்தின் மூலமும் மோசடி பேர்வழிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய முடியும். ஆனால் அது வெறும் மோசடி மூலம் பெற்ற சொத்துகளை மட்டுமே, அதுவும் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னரே பறிமுதல் செய்ய முடியும்.

ஆனால் இந்த புதிய மசோதாப்படி, அவரது சொத்துகள் எதுவானாலும் அனைத்தையும் பறிமுதல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg