தொழில்நுட்ப கோளாறால் டெல்லியில் அவசரமாக தரையிறங்கிய விமானம் - 176 பயணிகள் உயிர் தப்பினர்

Date:2018-03-13

(1520913641)201803130036487955_GoAir-plane-makes-emergency-landing-at-Delhi_SECVPF.gif

புதுடெல்லி:

மும்பை நோக்கி புறப்பட்ட தனியார் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் அவசரமாக டெல்லியில் தரையிறங்கியதால் 176 பயணிகள் உயிர் தப்பினர்.

கோ ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான A320 ரக ஏர்பஸ் விமானம் 176 பயணிகளுடன் நேற்று இரவு டெல்லியில் இருந்து மும்பையை நோக்கி புறப்பட்டுச் சென்றது.

மேலே பறந்த சிறிது நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த விமானி, உடனடியாக டெல்லி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார்.

நிலைமையை விவரித்து அவசரமாக தரையிறங்க அனுமதி அளிக்குமாறு கேட்டார். இதையடுத்து, விமான நிலைய அதிகாரிகள் அனுமதி அளித்ததை தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறங்கியது. தொழில்நுட்ப கோளாறை உரிய நேரத்தில் விமானி கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்ததால் 176 பயணிகளும் உயிர் தப்பினர்.

ஏற்கனவே, நேற்று காலை மும்பையில் இருந்து லக்னோ நகருக்கு புறப்பட்டு சென்ற தனியார் விமானம் நடுவானில் பறக்கும்போது என்ஜின் செயலிழந்ததால் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் இரு தனியார் விமானங்களில் ஏற்பட்ட கோளாறு பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg