வடக்கின் இயல்பு நிலைக்கான பணிகள் மிகவும் மந்தம்: ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியிடம் வடக்கு முதல்வர் கவலை

Date:2018-03-13

(1520914155)625.147.560.350.160.300.053.800.264.160.90.jpg

வடக்கில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மிகவும் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கவலை தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி போல் கொட்பிறி வடக்கிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவர் சந்தித்துள்ளார்.

இதன்போது முதலமைச்சர் தம்மிடம் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார் என ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி தமது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைத் தாம் மீண்டும் சந்தித்த போதே அவர் இந்தக் கவலையை வெளியிட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg