காலநிலை தொடர்பில் எச்சரிக்கை! மூவர் மாயம்

Date:2018-03-13

(1520914839)625.147.560.350.160.300.053.800.264.160.90 (4).jpg

முல்லைதீவு - நாயாறு பிரதேசத்திலிருந்து மீன்பிடிக்காக படகுமூலம் கடலுக்கு சென்ற மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.

குறித்த மீனவர்கள் நேற்றைய தினம் கடலுக்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலாபம், பங்கதெனிய பிரதேசங்களை சேர்ந்த 50, 48 மற்றும் 24 வயதுடையவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இந்த நிலையில், காணாமல்போன மீனவர்களை தேடும் பணிகள் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீரற்ற காலநிலையால் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் கடல் சார்ந்த பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் காலநிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...

Advertisments

(1486123897)side.jpg

Standard Advertisments

(1486123912)side.jpg