- ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 105 பொதுமக்கள் பலியானது உறுதி
- கிரீஸ்: கார் குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் முன்னாள் பிரதமர் லுகாஸ்
- ’உங்களோட தொந்தரவா போச்சு’ - அமெரிக்க ஊடகம் மீது டிரம்ப் பாய்ச்சல்
- ‘பனாமா கேட்’ ஊழல்: நவாஸ் ஷெரீப் பதில் அளிக்க கேள்வி பட்டியல் - கூட்டு புலனாய்வுக்குழு அனுப்பியது
சப்போட்டா பழத்தை தினமும் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி தெரியும?
பழங்கள் ஒவ்வொன்றுமே அற்புத குணங்களை பெற்றவை . பொதுவாகவே பழங்களில் அதிக நார்சத்தும் ஆன்டி ஆக்ஸெடென்டும் உள்ளது. இவை இரண்டுமே போஷாக்கிற்கும் புத்துணர்ச்சிக்கும் இளமையாக இருக்கவும் உதவுபவை. அவற்றில் சப்போட்டா விசேஷமிக்கது
சப்போட்டா மிகவும் இனிப்புச் சுவை கொண்டது. அதில் இருக்கு சத்துக்களும் நன்மைகளும் வியப்பை அளிப்பவை. சப்போட்டாவை பாலில் கலந்து மில்க் ஷேக் செய்வது இன்னும் சுவையை அதிகரிக்கச் செய்யும்.
கண் பார்வை :
கண் பார்வையை அதிகரிக்கச் செய்யும். கண் குறைப்பாட்டை தடுக்கும்.
இதில் அதிக விட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளது.
கர்ப்பகாலத்தில் உதவும் :
கர்ப்ப காலத்தில் உண்டாகும் வாந்தி தலை சுற்றல் சோர்வு, தளர்ச்சி ஆகிய்வற்றை போக்கும். உடலுக்கு தேவையான சக்தியையும் , தேவையான சத்துக்களையும் தாய்க்கும் சிசுவிற்கும் அளிக்கிறது.
மலச்சிக்கல் :
குடல்களில் நெகிழ்வுத்தன்மையை தரும். மல்ச்சிக்கலை குண்ப்படுத்தும். வயிற்று உபாதைகளை சரிப்படுத்தும்.
சக்தியை தரும் :
அன்றைய நாள் முழுவதும் சோம்பல் இல்லாமல் முழு எனர்ஜியுடன் இருக்க வேண்டுமென்றால் தினமும் ஒரு சப்போட்டா சாப்பிட்டு பாருங்கள்.
சிறு நீரக கற்களை கரைக்க :
சப்போட்டாவின் விதைகள் சிறு நீரகத்தில் உண்டாகும் கற்களை கரைக்கிறது.
எலும்பை பலப்படுத்தும் :
சப்போட்டாவில் அனைத்து மினரல்களும் உள்ளன. கால்சியம் பாஸ்பரஸ், ஜிங்க், செலினியம், காப்பர் ஆகிய சத்துக்கள் உங்கள் எலும்பிற்கு பலத்தை சேர்க்கும். அதோடு வயதான பின் வரும் எலும்பு பாதிப்புகளை சரிப்படுத்தும்.
ரத்த சோகை :
ரத்த சோகை உள்ளவர்கள் தினமும் ஒரு சப்போட்டா சாப்பிட்டு வந்தால் ரத்தம் அதிகரிக்கும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும்.
புற்று நோயை தடுக்கும் :
வாய்புற்று நோய் மற்றும் குடல் புற்று நோய் வராமல் தடுக்கும் குணங்கள் சப்போட்டாவில் உள்ளது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸென்டென்ட் புற்று நோய் வராமல் காக்கின்றன.