- ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் - 105 பொதுமக்கள் பலியானது உறுதி
- கிரீஸ்: கார் குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் முன்னாள் பிரதமர் லுகாஸ்
- ’உங்களோட தொந்தரவா போச்சு’ - அமெரிக்க ஊடகம் மீது டிரம்ப் பாய்ச்சல்
- ‘பனாமா கேட்’ ஊழல்: நவாஸ் ஷெரீப் பதில் அளிக்க கேள்வி பட்டியல் - கூட்டு புலனாய்வுக்குழு அனுப்பியது
இதயத்தின் ஆரோக்கியம் மேம்பட பின்பற்ற வேண்டிய சில சிம்பிளான பழக்கங்கள்!
இதய ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது. இன்றைய காலத்தில் இதய நோயால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஒருவரது இதயத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கு, அவர்களது பழக்கவழக்கங்கள் தான் காரணம்.
எனவே பழக்கவழக்கங்களில் மாற்றத்தைக் கொண்டு வந்தால், இதயத்தின் செயல்பாடு தானாக மேம்படும். இங்கு ஒருவரது இதயத்தின் ஆரோக்கியம் மேம்பட பின்பற்ற வேண்டிய சில சிம்பிளான பழக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
வாய் விட்டு சிரியுங்கள்
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்று சொல்வது வெறும் பழமொழி மட்டுமல்ல, உண்மையும் கூட. சந்தோஷமாக வாய் விட்டு சிரித்தால், டென்சன் குறைவதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியம் ஊக்குவிக்கப்பட்டு, தசைகள் ரிலாக்ஸ் அடையும். ஏனெனில் சிரிக்கும் போது மன அழுத்தத்திற்கு காரணமான ஹார்மோன்கள் அழிக்கப்பட்டு, இரத்த நாளங்களில் இரத்த ஓட்டம் சீராகி, இதய ஆரோக்கியமும் மேம்படும்.
செல்லப் பிராணிகள்
செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவிடும் போது இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாடு மேம்பட்டு, இதய நோயால் இறப்போரின் விகிதம் குறைந்துள்ளதாக தேசிய சுகாதார நிறுவனம் கூறுகிறது. எனவே மனநிலையை மேம்பட நினைத்தால், வீட்டில் செல்லப் பிராணியை வளர்த்து வந்தால், அவைகளுடன் சிறிது நேரத்தை செலவிடுங்கள்.
ரெட் ஒயின்
ரெட் ஒயினில் ப்ளேவோனாய்டுகள் மற்றும் ரெஸ்வெட்ரால், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கெமிக்கல்கள் மற்றும் டாக்ஸின்கள் உடலில் இருந்து வெளியேற்றப்பட்டு, இரத்தம் உறைவது மற்றும் தமனிகள் பாதிக்கப்படும் அபாயம் குறைந்து, இதய நோய் வரும் வாய்ப்பு குறையும்.
வாக்கிங்
தினமும் வாக்கிங் மேற்கொள்வதால், உடல் எடை குறைவதோடு, இதயத்தில் இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்பட்டு, இதய ஆரோக்கியம் மேம்படும்.
ஒமேகா-3 கொழுப்பு உணவுகள்
அசைவம் சாப்பிடுபவர்களாக இருந்தால், மீனின் மூலம் ஒமோக-3 கொழுப்பு அமிலங்களைப் பெறலாம். அதுவே வெஜிடேரியனாக இருந்தால், ஆளி விதைகள், கடுகு எண்ணெய், மாம்பழம், பெர்ரிப் பழங்கள் மற்றும் முட்டைக்கோஸ் போன்றவற்றின் மூலம் பெறலாம்.