தகவல் துகள்கள்: நிலாவில் ஒரு, 'கண்' பதிக்க இஸ்ரோ திட்டம்

Date: 2016-10-26 முகப்பு

(1477483343)ISRO.jpg

சந்திரனில் ஒரு தொலைநோக்கியை நிறுவ முடியுமா என, இஸ்ரோ ஆராய்ந்து வருகிறது. அது சாத்தியமானால், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சித் திறனை அதிகரிக்க, அது உதவும் என்று, இஸ்ரோவின் தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார், சமீபத்தில் ஊடகங்களிடம் தெரிவித்தார்.தற்போது, லடாக்கின் லே பகுதியில் உள்ள ஹான்லே என்ற இடத்தில், ஒரு விண் தொலைநோக்கி உள்ளது. இதை, பெங்களூரிலிருந்தபடியே, இஸ்ரோ விஞ்ஞானிகள் இயக்கி வருகின்றனர்.

“அதை போலவே, சந்திரனில் ஒரு தொலைநோக்கியை நிறுவி, அதை இங்கிருந்தே இயக்க முடிந்தால் எப்படி இருக்கும் என்று, நாங்கள் யோசித்து வருகிறோம்,” என, கிரண் விளக்கினார்.சந்திரனில், வளிமண்டல மாசுபாடு இல்லை என்பதால், அங்கு வைக்கப்படும் தொலைநோக்கி மூலம், மிகத் தெளிவாகவும், விண்வெளி காட்சிகளைப் பார்க்க முடியும் என்றார் அவர்.

ஏற்கனவே, அஸ்ட்ரோசாட் என்ற பல் அலைவரிசை விண்வெளி கண்காணிப்பகத்தில், 2015 செப்டம்பரில், இஸ்ரோ ஏவியுள்ளது. இது, கருந்துளைகள் மற்றும் நியூட்ரான் நட்சத்திரங்களை ஆராய உதவுகிறது.
சந்திரனுக்கு இஸ்ரோ, 2017ன் இறுதி வாக்கில், 'சந்திரயான் 2' விண்கலனை அனுப்பும் என்றும், அதற்கான சோதனைகள் இப்போதே நடந்து கொண்டிருப்பதாகவும், கிரண் குமார் தெரிவித்தார்.

Advertisments

Standard Advertisments

(1486123912)side.jpg