குட்டி ரொட்டி கார்!

Date: 2016-10-26 முகப்பு

(1477483945)JAPAN.jpg

சாலை நெரிசல் மிக்க நகரங்களில், பெரிய கார்களை ஓட்டிச் செல்வது அநாகரிகமாக ஆகப்போகிறது. குட்டி நாடான ஜப்பானில், ஹோண்டா போன்ற பெரிய கார் நிறுவனங்களே, குட்டி கார்களை 'சிட்டி கார்' என்று தயாரிக்க ஆரம்பித்திருக்கின்றன..

ஹோண்டாவும், 'கபுகு இங்க்' என்ற முப்பரிமாண வடிவமைப்பு நிறுவனமும் சேர்ந்து, 'ஹடோ சப்லே' என்ற குட்டி காரை வடிவமைத்துள்ளன. டோஷியாமா என்ற அடுமனை தயாரிக்கும் புறா வடிவ ரொட்டிக்குத்தான் ஹடோ சப்லே என்று பெயர். இந்த அடுமனையின் சரக்கு வாகனமாக பயன்படுத்தத்தான் ஹோண்டா இந்த குட்டி வாகனத்தை தயாரித்துள்ளது.

மின்சாரத்தில் இயங்கும் இந்த வாகனம், ஒரு மின்னேற்றத்திற்கு 80 கி.மீ., தான் இப்போதைக்கு பயணிக்கும். வாகன ஓட்டி ஒருவர்தான் அமர முடியும். மீதி எல்லா இடத்திலும் ரொட்டி தட்டுகளை அடுக்க பயன்படுத்திக்கொள்ளலாம். உள்ளே உலோக கட்டுமானம் கொண்ட இந்தக் காரின் வெளிப்புறம் அனைத்துமே முப்பரிமாண அச்சியந்திரத்தில் உருவாக்கப்பட்ட பாகங்கள்தான். இதன் உயரம் 1.5 மீட்டர். நீளம் 2.5 மீட்டர். அகலம் 1.2 மீட்டர். எடை, 600 கிலோ.


ஒரு அடுமனையின் தேவைக்கு ஹோண்டாவால் வளைந்துகொடுக்க முடிந்திருப்பதற்கு முப்பரிமாண அச்சு தொழில்நுட்பமே காரணம். 
இதேபோல தனது குட்டி காரின் அடிப்படைகளை அப்படியே வைத்துக்கொண்டு, மற்ற தேவைகளுக்கேற்ப காரின் உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் மாற்றி உருவாக்கித் தர தயாராகி வருகிறது ஹோண்டா.

 

Advertisments

Standard Advertisments

(1486123912)side.jpg